கங்குவா கலெக்ஷன் ₹2000 கோடி… இப்பவே உருட்டும் தயாரிப்பாளர்..!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2024, 1:44 pm

கங்குவா படம் நிச்சயம் ₹2000 கோடி வசூல் செய்யும் என படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா உறுதிபட கூறியுள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கங்குவா. பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிததுள்ளனர்.

Kanguva 2000 cr boxoffice ?

ஸ்டூடியே க்ரீன் தயாரிக்க, தேவிஸ்ரீபிராசாத் இசையமைத்துள்ளார். இதுவரை டீசர் மற்றும் பாடல் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஸ் உள்ளிட்ட மொழிகளில் நவம்பர் 14ந் தேதி படம் வெளியாக உள்ளது.

மேலும் படிக்க: கங்குவா படத்திற்குக்காக கணக்கில்லாமல் சம்பளம் வாங்கிய சூர்யா… எத்தனை கோடி தெரியுமா?

ஏற்கனவே படம் அக்டாபர் 10ம் தேதி வெளியாக இருந்த நிலையில், ரஜினியின் வேட்டையன் படம் வெளியானதால், தள்ளிப்போனது.

கங்குவா படத்துக்கான ப்ரொமோஷன் பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. வரும் 20ஆம் தேதி கங்குவா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அளித்த பேட்டியில், கங்குவா 500 கோடி, 700 கோடி என எவ்வளவு வசூலித்தாலும் அதற்கான ஜிஎஸ்டியை உடனே சமூக வலைதளத்தில் பதிவேற்றுவேன் என கூறினார்.

மேலும் ஏற்கனவே வந்த படங்களின் தயாரிப்பாளர்களிடம் எத்தனை வசூல் என்பதை ஜிஎஸ்டியை வெளியிட்டாலே போதும் என கோட், வேட்டையன் படம் குறித்து மறைமுகமாக பேசினார்.

Producer kanguva cross 2000 cr Boxoffice ?

அதே போல கங்குவா படம் ₹2000 கோடி வசூல் செய்யும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ஜிஎஸடியை பதிவு செய்கிறேன் என்றும் ஞானவேல் ராஜா கூறினார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!