ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தொடர்ந்து ஹார்ட் டிஸ்க்கை தவறவிட்ட மற்றுமொரு பிரபல இயக்குனர்? அடப்பாவமே…

Author: Prasad
27 May 2025, 12:04 pm

ஹார்ட் டிஸ்க்கை காணும்…

கடந்த 2024 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலரது நடிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான “லால் சலாம்” திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்ற திரைப்படமாக அமைந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அத்திரைப்படம் ரூ.90 கோடி செலவில் உருவானது. ஆனால் இத்திரைப்படம் ரூ.20 கோடியே வசூலானது. இது இத்திரைப்படத்தை தயாரித்த லைகா நிறுவனத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்தது. 

kannappa movie hard disk missing with a person

இதனிடையே இத்திரைப்படத்தின் புரொமோஷன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இத்திரைப்படத்தின் பல Footages அடங்கிய ஹார்ட் டிஸ்க் தொலைந்துப்போய்விட்டதாக கூறினார். இவர் இவ்வாறு கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் ஒரு பக்கம் சமூக வலைத்தளங்களில் ட்ரோலுக்குள்ளாக்கவும்பட்டது. 

ஹார்ட் டிஸ்க்கை தொலைத்த மற்றொரு இயக்குனர்

இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தொடர்ந்து மற்றுமொரு இயக்குனர் ஹார்ட் டிஸ்க்கை தவறவிட்டுள்ளதாக தகவல் வெளிவருகிறது. ஹார்ட் டிஸ்க் மட்டுமல்லாது ஹார்ட் டிஸ்க் வைத்திருந்த நபரும் காணாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது.

பிரபாஸ், மோகன்லால், விஷ்ணு மஞ்சு, அக்சய் குமார், காஜல் அகர்வால் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கண்ணப்பா”. இத்திரைப்படத்தை முகேஷ் குமார் சிங் என்பவர் இயக்கி வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இத்திரைப்படம் ஜூன் மாதம் 27 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

kannappa movie hard disk missing with a person

இந்த நிலையில்தான் இத்திரைப்படத்தில் படமாக்கப்பட்ட முக்கியமான VFX காட்சிகளின் Footages அடங்கிய ஹார்ட் டிஸ்க்கை வைத்திருந்த நபர் ஒருவர் அந்த ஹார்ட் டிஸ்க்குடன் காணாமல் போயுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. படக்குழுவினர் அந்த ஹார்ட் டிஸ்க்கை ஃபோர் ஃபிரேம்ஸ் ஸ்டூடியோவிற்கு கொரியரில் அனுப்பிவைத்தனராம். அந்த கொரியரை பெற்ற நபர் அந்த கொரியருடன் காணாமல் போனதாக கூறுகின்றனர். இது குறித்து போலீஸாரிடம் புகார் அளித்துள்ள நிலையில் போலீஸார் அந்நபரை வலைவீசி தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. 

  • dd next level movie sad collection report கலெக்சனில் மண்ணை கவ்விய டிடி நெகஸ்ட் லெவல்? இப்படி ஒரு நிலைமையா வரணும்!
  • Leave a Reply