எங்க படத்தை ட்ரோல் பண்ணீங்கனா நீங்க காலி- மிரட்டும் தொனியில் அறிக்கை வெளியிட்ட கண்ணப்பா படக்குழு!

Author: Prasad
26 June 2025, 6:38 pm

பிரம்மாண்ட திரைப்படம் 

பிரபல தெலுங்கு நடிகரான மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் “கண்ணப்பா”. இத்திரைப்படத்தை முகேஷ் குமார் சிங் என்பவர் இயக்கியுள்ளார். மோகன் பாபு இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். 

இதில் விஷ்ணு மஞ்சுவுக்கு ஜோடியாக பிரீத்தி முகுந்தன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் சரத்குமார், மதுபாலா, மோகன் பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் அக்சய் குமார், காஜல் அகர்வால், பிரபாஸ், மோகன் லால் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். ரூ.200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இத்திரைப்படம் நாளை (ஜூன் 27)  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

kannappa movie production house issued public notice to audience

இத்திரைப்படம் கண்ணப்ப நாயனாரின் புராணத்தை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதில் கண்ணப்பாவாக விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தை ட்ரோல் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் அறிக்கை வெளியிட்டு எச்சரித்துள்ளது.

படத்தை விமர்சிக்க கூடாது?

“எங்களின் கண்ணப்பா திரைப்படம் ஜூன் 27,2025 உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்தோ அல்லது இதன் பங்குதாரர்களை குறித்தோ அவதூறு பரப்பினால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 

மேலும் அதில், “இத்திரைப்படம் மக்களுடன் அதிகளவு தொடர்புபடுத்தும் வகையில் பொறுப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அனைத்து விமர்சகர்களும் திட்டமிட்ட உள்நோக்கம் அல்லது பழி வாங்கும் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் படத்தை பார்த்து, அதன் நோக்கத்தை புரிந்துகொண்டு பொறுப்புடன் கருத்து தெரிவிக்குமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளது.

kannappa movie production house issued public notice to audience

“இந்திய அரசியலமைப்பு பிரிவு 19 (1) (a) பிரிவின் கீழ் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை பாதுகாக்கப்பட்டது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆனால் அதே வேளையில் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தாக்குதல் நடத்துவது கருத்துரிமை அல்ல. மாறாக அது நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒன்று என நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. ஆதலால் இது குறித்து சட்ட நடவடிக்கைகள் எடுக்க எங்களுக்கு உரிமை உள்ளது” எனவும் அந்த அறிக்கையின் மூலம் படக்குழு எச்சரித்துள்ளது. 

“கண்ணப்பா” படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையை ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!