கர்மா திருப்பி அடிக்கும்.. சமந்தாவை விளாசிய பிரபல இயக்குநரின் மனைவி!

Author: Udayachandran RadhaKrishnan
3 June 2025, 11:06 am

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். சினிமா இவருக்கு கைக்கொடுத்து தூக்கி விட்டது போல தனிப்பட்ட வாழ்க்கை அமையவில்லை.

யாரை காதலித்து கரம் பிடித்தாரோ கடைசியில் அவர் கை விட்டுவிட்டார். நடிகர் நாக சைதன்யாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான 4 வருடத்தில் இந்த தம்பதி பிரிந்து விவாகரத்து பெற்றனர்.

இதையும் படியுங்க: தம்பிங்களா கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடுங்க- வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் தனுஷ்!

ஆனால் நாக சைதன்யாவோ, நடிகை சோபிதாவை காதலித்து கரம்பிடித்தார். மறுபக்கம் சமந்தாவோ, நோய் வாய்ப்பட்டு குணமடைந்தது தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமந்தாவின் அடுத்த திருமணம் எப்போது என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், பிரபல இயக்குநருடன் இவர் ஊர் சுற்றி வருவதாக கிசுகிசு எழுந்தது. அதை உறுதிப்படுத்தும் விதமாக காதலர் தினத்தன்று இன்ஸ்டாகிராமில் ஆண் நண்பருடன் இருந்த புகைப்படத்தை சமந்தா வெளியிட்டிருந்தார்.

ஆனால் அந்த நபர் யார் என்று தெரியாத நிலையில், இயக்குநர் ராஜநிடி மோரு உடன் அடுத்தடுத்து போட்டோவை பகிர்ந்தார். இனதால் அவர்தான் சமந்தாவின் அடுத்த கணவர் என்று இணையவாசிகள் பேச ஆரம்பித்தனர்.

Director Raj Ex Wife Dumped Samantha

மேலும் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ வீடு பார்த்து கொண்டிருப்பதகாவும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இயக்குநர் ராஜ் மனைவி ஷ்யாமலி டே என்பவர் இன்ஸ்டாவில் போட்டிருக்கும் பதிவு பேசு பொருளாகியுள்ளது.

கர்மா பற்றி அவர் போட்டிருக்கு பதிவை பார்த்த இணையவாசிகள் நிச்சயம் சமந்தாவை தான் விமர்சித்துள்ளார் என கூறி வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!