நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா?- கமல்ஹாசனிடம் ஆதாரம் கேட்டு மன்னிப்புக்கு கெடு விதித்த நீதிமன்றம்!

Author: Prasad
3 June 2025, 1:02 pm

தடையை எதிர்த்து வழக்கு

“தக் லைஃப்” ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என கூறியது கர்நாடக மாநிலத்தில் எதிர்ப்பலைகளை ஏற்படுத்திய நிலையில் “கமல்ஹாசன் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும், அப்படி இல்லை என்றால் தக் லைஃப் திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்வோம்” என கன்னட அமைப்புகளும் கர்நாடக அரசியல் பிரபலங்களும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனால் கமல்ஹாசன் தான் மன்னிப்பு கேட்க முடியாது என கூறிய நிலையில் “தக் லைஃப்” திரைப்படம் வெளியாவதை கர்நாடக பிலிம் சேம்பர் தடை செய்துள்ளது. இந்த தடையை எதிர்த்து கமல்ஹாசன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். “தக் லைஃப்” திரைப்படம் கர்நாடகாவில் எந்த வித இடையூறும் இல்லாமால் வெளிவர வழிவகுக்க வேண்டும் எனவும் “தக் லைஃப்” திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பு கோரியும் தனது மனுவில்  வலியுறுத்தியிருந்தார் கமல்ஹாசன்.

karnataka court said that kamal haasan should apologize for his speech about kannada

நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா?

இந்த நிலையில் கமல்ஹாசனின் வழக்கை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், “தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பேசினீர்கள். நீங்கள் வரலாற்று ஆய்வாளரா? அல்லது மொழியியல் வல்லுநரா? என கேள்வி எழுப்பியுள்ளது. 

“மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் தக் லைஃப் படம் ஏன் வெளியாக வேண்டும் என நினைக்கிறீர்கள்? உங்களது பேச்சால் சமூக நல்லிணக்கம் பாதிப்படைந்துள்ளது. ரூ.300 கோடி செலவில் படம் எடுத்துள்ளதாக கூறும் நீங்கள் ஒரு மன்னிப்பு கேட்பதால் என்ன? 2.30 மணிக்கு இவ்வழக்கை மீண்டும் விசாரிப்போம். அப்போது கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பாரா அல்லது பல கோடிகளை இழப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!