சர்ச்சையில் சிக்கிய சங்கர் மகள் நடித்த முதல் படம்… விருமன் படம் வெளியாவதில் சிக்கல்..!

Author: Rajesh
30 March 2022, 1:19 pm

கொம்பன், மருது, புலிக்குத்தி பாண்டி, தேவராட்டம் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் தான் இயக்குனர் முத்தையா. இவர், தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார். அவர் இப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

இந்த திரைப்படத்தினை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். விருமன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தை வருகிற ஜூன் மாதம் வெளியிடவும் திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில், தற்போது இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இப்படத்தின் கதை தன்னுடையது என உதவி இயக்குனர் ஒருவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இப்படம் திட்டமிட்டபடி ரிலீசாவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

விருமன் படத்தை அடுத்து நடிகர் கார்த்தி தற்போது சர்தார் படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் இயக்குனர் முத்தையாவும் தனது அடுத்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கி உள்ளார். நடிகை அதிதி ஷங்கர் அடுத்ததாக கொரோனா குமார் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!