விஜயை ஏமாற்றி Prank பண்ண கார்த்தி ! Beast ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் !

18 July 2021, 6:17 pm
Quick Share

இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய PS மித்ரன் நடிகர் கார்த்தியை வைத்து தற்போது “சர்தார்” எனும் படத்தை இயக்கி வருகிறார். தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதில் சற்றே வயதான தோற்றத்தில் இருக்கும் கார்த்தியை பார்த்தவுடன் இந்த படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மித்ரனின் முந்தைய படங்களை போலவே இப்படமும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாக உள்ளதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு கோகுலம் ஸ்டியோவில் நடந்து வருகிறது. இது நடிகர் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு அருகில் நடைபெற்று வருகிறது.

அப்போது நடிகர் கார்த்தி விஜய்யை நேரில் போய் சந்தித்துள்ளார். ஆனால் சர்தார் படத்தின் வயதான கெட்டப்பில் இருந்ததால் விஜய்க்கு அடையாளம் தெரியவில்லை. அதன்பின் கார்த்தி தன்னை அறிமுகம் செய்து கொண்டபின்பு தான் விஜய் ஷாக்காகி கார்த்தியை கட்டிப்பிடித்து வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இந்த செய்தி சினிமா ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Views: - 197

2

2