பிப்ரவரி 1ஆம் தேதி டிரீட் கொடுக்கும் கார்த்தி!

30 January 2021, 8:34 pm
Karthi Sultan - Updatenews360
Quick Share

கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரெமோ படத்தின் இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் சுல்தான். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இது ராஷ்மிகா மந்தனாவின் முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் கார்த்திக்கு மனைவியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்கு விவேக் – மெர்வின் இசையமைத்துள்ளனர். கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2020 ஆம் ஆண்டு உலகையே அச்சுறுத்திய கொரோனா லாக்டவுன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து, 2020 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

திரையரங்குகள் திறக்கப்பட்டு 50 சதவிகிதத்திற்கும் அதிகமான இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு படமும் திரையரங்கை நோக்கி படையெடுக்கின்றன. அந்த வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் மாஸ்டர், ஈஸ்வரன் ஆகிய படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தன. கடந்த 28 ஆம் தேதி சிபிராஜ் நடித்த கபடதாரி படம் திரைக்கு வந்தது.

தனுஷின் ஜகமே தந்திரம் படமும் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இந்த நிலையில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சுல்தான் படத்தின் முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு சுல்தான் டீசர் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் சுல்தான் படம் திரைக்கு வரயிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் திரையரங்கில் வெளியிடப்படும் என்றும், பிறகு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது. எனினும், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Views: - 33

0

0