வாந்தி தான் வருது…பேட் கேர்ள் படம் ரிலீஸ் ஆகவே கூடாது…பிரபல நடிகை காட்டம்..!

Author: Selvan
8 February 2025, 9:57 pm

பேட் கேர்ள் படத்தை வெளுத்து வாங்கிய நடிகை கஸ்தூரி

சமீபத்தில் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவந்த பேட் கேர்ள் திரைப்படத்தின் டீசர் பெரும் சர்ச்சையை சந்தித்து வருகிறது.இப்படத்தின் டீசரை பலரும் எதிர்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: என்னை ஏன் குற்றவாளியா பார்க்கிறீங்க…ரசிகர்களுக்கு நடிகர் நாக சைதன்யா கேள்வி..!

குறிப்பிட்ட பிராமண சமுதாயத்தை அசிங்கப்படுத்தியதால் வெற்றி மாறன் மீது அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்த நிலையில் நடிகை கஸ்தூரி தினமலர் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் பேட் கேர்ள் திரைப்படத்தை பற்றி பேசியுள்ளார்.

அதில் பேட் கேர்ள் திரைப்படம் பிராமண சமுதாயத்தை இழிவு படுத்துகிறது,குறிப்பிட்ட நேரம் மட்டுமே வரும் டீசரில் இவ்ளோ கேவலமான விசயங்கள் வரும் போது,அப்போ படம் முழுவதும் எப்படி இருக்கும் என்று கொஞ்சோ சிந்தித்து பாருங்கள்.

இந்த படம் சமூகத்திற்கு ஒரு நல்ல செய்தியை கொடுக்கும் படம் மாதிரி தெரியவில்லை,இது ஒரு மினி ப்ளூ பிலிம் படமாக உள்ளது,பெண் சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கில் அமைந்துள்ளது ,ஸ்கூல் படிக்கும் ஒரு பெண்ணை இவ்ளோ கேவலமாக காட்டியுள்ளனர்,படத்தின் காட்சிகள் எல்லாம் பார்க்கும் போது எனக்கு வாந்தி தான் வருகிறது என ரொம்ப கோவமாக அந்த பேட்டியில் கொந்தளித்துள்ளார் .

  • Sunny Deol praises South Indian cinema தென்னிந்தியா பெஸ்ட்..அங்கே வாழ ஆசை..மும்பையில் சலசலப்பை ஏற்படுத்திய பாலிவுட் நடிகர்.!