“ஒரு வருஷம் ஆன அப்புறமும் இன்னும் காசு வரல” பிக்பாஸ் கஸ்தூரியின் Open ஸ்டேட்மென்ட் !

30 September 2020, 6:31 pm
Quick Share

ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார். தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார்.

இந்நிலையில், இவர் பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்று ஒரு வருடம் ஆகியும் தனக்கான சம்பளம் வழங்கப்படவில்லை என நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து டிவிட்டரில்,

“No words to thank @vijaytelevision who have withheld my payment for over a year.
நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டதே manumission குழந்தைகளோட ஆப்பரேஷன் செலவுக்காகத்தான். I never believed any of your fake promises, but even I didnt expect this” என்று ஆவேசமாக டிவிட் போட்டுள்ளார்.

Views: - 28

0

0