காவல் உடையில் கஸ்தூரி-சரண்டர் ஆன ரசிகர்கள்..!

Author: Udhayakumar Raman
12 September 2021, 6:49 pm
Kasthuri_Actress
Quick Share

ஆத்தா உன் கோயிலிலே, ஆத்மா, அமைதிப்படை, இந்தியன், தூங்கா நகரம், தமிழ்படம் உட்பட ஏராளமான படங்களில் நடித்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடுவில் கொஞ்சம் Gap எடுத்துகொண்டு 2009 ஆம் ஆண்டில் அருண்விஜய் நடிப்பில் வெளியான மலை மலை படத்தின் மூலம் Re – Entry தந்தார்.

தற்போது கூட படங்களில் நடித்து வரும் இவர், சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் மற்றும் அரசியல் குறித்து, இவரின் சமூக வலைதள பக்கத்தில் தனது கருத்தை தெரிவிப்பதன் மூலம் இன்னும் பல மக்கள் மத்தியில் பிரபலம் ஆகி வருகிறார். உங்களுக்கு தெரியாதா இன்னொரு விஷயம் என்ன என்றால், மாநில அளவில் இவர் ஒரு Hockey வீராங்கனை ஆவார்.

நடிகையும் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான கஸ்தூரி சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருப்பார்.இந்தநிலையில் கஸ்தூரி சில தினங்களுக்கு முன் ரஜினியின் உடல்நிலை பற்றி விமர்சனம் செய்ய, அது தீயாக பரவி ரஜினி தரப்பு வரை சென்று கஸ்தூரிக்கு ரஜினி தரப்பில் இருந்து தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது இந்த முறை, போலீஸ் காஸ்ட்யூமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “எங்களை அரஸ்ட் பண்ணுங்க..” என்று கதறி வருகிறார்கள்.

Views: - 716

8

0