படத்தின் கதையில் ஓவராக தலையிட்ட கவின்? கிடுக்கு பிடி போட்ட வெற்றிமாறன்? 

Author: Prasad
30 June 2025, 7:11 pm

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின்

“நட்புனா என்னனு தெரியுமா?”, “லிஃப்ட்”  போன்ற திரைப்படங்களில் கவின் கதாநாயகனாக நடித்திருந்தாலும் அவர் நடித்த “டாடா” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் கமிட் ஆனார் கவின். எனினும் அவர் நடித்த “ஸ்டார்”, “பிளடி பெக்கர்” போன்ற திரைப்படங்கள் ரசிகர்களின் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. 

kavin atrocities in shooting spot controlled by vetrimaaran

இந்த நிலையில் “பிளடி பெக்கர்” திரைப்படத்தை தொடர்ந்து “கிஸ்” திரைப்படத்தில் நடித்துள்ளார் கவின். அத்திரைப்படத்தை அடுத்து தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் “மாஸ்க்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக் என்பவர் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா, ருஹானி ஷர்மா, சார்லி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை வெற்றிமாறனுடன் இணைந்து ஆண்ட்ரியாவும் தயாரித்து வருகிறார். 

ஓவராக தலையிடும் கவின்?

இந்த நிலையில் “மாஸ்க்” திரைப்படத்தின் கதையில் கவினின் தலையீடு அதிகமாக உள்ளதாம். படப்பிடிப்பில் காட்சியமைப்புகளில் அதிகளவில் தலையிடுகிறாராம். ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த இயக்குனர் வெற்றிமாறனிடம் இப்பிரச்சனையை கொண்டுசென்றாராம். 

kavin atrocities in shooting spot controlled by vetrimaaran

இதனை தொடர்ந்து படப்பிடிப்புத் தளத்திற்கு வெற்றிமாறனும் வரத்தொடங்கினாராம். அதன் பின் கவின் கதையில் தலையிடவே இல்லையாம். இத்தகவலை வலைப்பேச்சு சக்தி பகிர்ந்துகொண்டுள்ளார். 

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!
  • Leave a Reply