“சிவகார்த்திகேயன் மாதிரியே இருக்கீங்க” கவினின் புதிய ஸ்டில்லை பார்த்து மிரண்ட ரசிகர்கள் !

23 June 2020, 9:54 pm
Quick Share

Bigg Boss கவினுக்கு ஒரு வழியாக லிஃப்ட் என்கிற படம் கிடைத்துவிட்டது, இந்த படத்தில் ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்து வருகிறார். First look பார்க்கையில் த்ரில்லர் பட பாணியில் உருவாக இருக்கிறது என்பது தெரிகிறது.

BIGG Boss நிகழ்சியில் கலந்து கொண்ட சிலருக்கு மட்டும் பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அதேபோல் கவினுக்கும் பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன, அதனால் படங்களில் நடிப்பதில் மிகவும் பிஸியாக இருக்கிறார், அதே போல் அடிக்கடி இந்த படத்தின் பற்றிய Update கொடுத்து வருகிறார்.

தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக சீரியல் நடிகராக வலம் வந்தவர் கவின். மேலும் இவர் வெள்ளித்திரையில் நட்புன்னா என்னனு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலமாக நாயகனாக தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

தற்போது லிஃப்ட் இல், இருந்து ஒரு Still ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், “சிவகார்த்திகேயன் மாதிரியே இருக்கீங்க” என்று கூறிவருகிறார்கள்.