டாக்டருக்கு வாழ்த்து சொல்லிய கவின் ! ரசிகனாகவும், சகோதரனாகவும் …

3 December 2019, 11:26 am
Kavin_UpdateNews360
Quick Share

திரையுலகில் ஹீரோ ஆவதற்கு முன்னர் இருந்த நட்பு வட்டாரங்களை தற்போதும் அதே போன்று மெயின்டென் செய்பவர் சிவகார்த்திகேயன். அவர் தொகுப்பாளராக இருந்த காலத்தில் இருந்தே அட்லீ, அருண் காமராஜ், நெல்சன், கவின் ஆகியோர் அவருக்கு நல்ல நண்பர்கள். அந்த நட்பை இன்றும் அப்படியே கடைபிடிக்கிறார் சிவா.

கோலமாவு கோகிலா படத்தை சிவாவின் நண்பரும் இயக்குனருமான நெல்சன் இயக்கி இருந்தார். அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தந்தது. அதனை தொடர்ந்து தற்போது நெல்சன் தனது நண்பரான சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை எடுக்க இருக்கிறார். இந்த படத்தின் அறிவிப்பு நேற்று மாலை வெளியானது. மேலும் அதனை கேஜே ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயனின் எஸ்.கே நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.

இதில் சிவகார்த்திகேயனும், இயக்குனர் நெல்சனும் இணைந்தது ஒரு ரசிகனாகவும், சகோதரனாகவும் தனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார் கவின். இந்த படத்தில் கவினும் உள்ளார் என்று பல தகவல்கள் ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பரவிவந்தது குறிப்பிடத்தக்கது.

1 thought on “டாக்டருக்கு வாழ்த்து சொல்லிய கவின் ! ரசிகனாகவும், சகோதரனாகவும் …

Comments are closed.