ரகசிய மது விருந்தில் கலந்துகொண்ட கயாது லோஹர்? டாஸ்மாக் முறைகேடு விவகாரத்தில் சிக்கும் பிரபலங்கள்!
Author: Prasad23 May 2025, 1:01 pm
சூடுபிடிக்கும் விவகாரம்
தமிழகத்தின் அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தும் விவகாரமாக டாஸ்மாக் முறைகேடு விவகாரம் அமைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறை டாஸ்மாக் தலைமையிடம், மது ஆலைகள் உட்பட 20 இடங்களுக்கு மேல் அதிரடி சோதனையில் ஈடுபட்டது. இதில் ரூ.1000 கோடிகளுக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது.
இந்த விவகாரத்தில் “Dawn Pictures” ஆகாஷ் பாஸ்கரனின் வீட்டில் சில நாடகளுக்கு முன்பு அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது. இதில் தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களுக்கு ரொக்கமாக பல கோடி ரூபாய் கொடுத்தத்தற்கான ஆவணங்களை கைப்பற்றியது அமலாக்கத்துறை. ஆகாஷ் பாஸ்கரன், தனுஷை வைத்து “இட்லி கடை”, சிம்புவை வைத்து “STR 49”, சிவகார்த்திகேயனை வைத்து “பராசக்தி” போன்ற திரைப்படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் ஆகாஷ் பாஸ்கரனை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் ஆகாஷ் பாஸ்கரன் தற்போது தலைமறைவாகிவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரத்தில் தொழிலதிபர் ரத்தீஸ், விக்ரம் ஜுஜு உள்ளிட்ட திமுகவுக்கு நெருக்கமான முக்கிய புள்ளிகளின் பெயர்களும் அமலாக்கத்துறை வளையத்தில் சிக்கியுள்ளது.
மது விருந்தில் கயாது லோஹர்
டாஸ்மாக் விவகாரத்தில் முக்கிய புள்ளியாக கருதப்படும் தொழிலதிபர் ரத்தீஸின் மது விருந்தில் சில வாரங்களுக்கு முன்பு “டிராகன்” பட நடிகை கயாது லோஹர் கலந்துகொண்டதாக அரசியல் விமர்சகர் மாரிதாஸ் தனது வீடியோ ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இந்த மது விருந்தில் இயக்குனரும் நயன்தாராவின் கணவருமான விக்னேஷ் சிவனும் கலந்துகொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழிலதிபர் ரத்தீஸ் தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் செய்திகள் பரவி வருகின்றன.