என்னைய பார்த்தா உங்களுக்கு அப்படி தெரியுதா?- தீடீரென கொந்தளித்த கயாது லோஹர்! என்னவா இருக்கும்?
Author: Prasad2 May 2025, 1:55 pm
கனவுக்கன்னி
தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது, அதனை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், மராத்தி போன்ற மொழி திரைப்படங்களில் நடித்த கயாது, தமிழில் “டிராகன்” திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

“டிராகன்” திரைப்படத்தில் அவர் திரையில் தோன்றிய விதமும் அவரது தோற்றமும் இளைஞர்களை படாத பாடு படுத்தியது. “டிராகன்” திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தமிழில் “இதயம் முரளி”, “STR 49” ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கயாது லோஹர், ரிலேஷன்ஷிப் குறித்து பேசிய விஷயம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
நான் அப்படி பட்ட பொண்ணு இல்லை…
“இப்போதெல்லாம் புதுபுது வார்த்தைகளுக்கு புது புது அர்த்தங்களை கண்டுபிடித்து வருகின்றனர். இப்போதெல்லாம் ரிலேஷன்ஷிப், ஷிட்சுவேஷன்ஷிப் போன்ற பல ஷிப்கள் வந்துவிட்டன. நீங்கள் நினைக்கிற மாதிரியான பெண் நான் கிடையாது. நான் எந்த ரிலேஷன்ஷிப்பிலும் இல்லை. எதிலும் அவ்வளவு எளிதாக மாட்டிக்கொள்ள மாட்டேன்” என ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார். இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
