கீர்த்தி சுரேஷூக்கு திருமணமா? மாப்பிள்ளை இசையமைப்பாளரா?

8 February 2021, 9:53 pm
Quick Share

கீர்த்தி சுரேஷூக்கும், இசையமைப்பாளர் அனிருத்துக்கு திருமணம் நடக்க இருப்பதாக புதிதாக தகவல் வெளியாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானார். ரஜினி முருகன் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேஷ் அதிகளவில் பிரபலமானார். இதையடுத்து, பட வாய்ப்பும் குவித்தது. ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம், சீம ராஜா, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, சர்கார், பென் குயின், மிஸ் இந்தியா என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றார். தற்போது குட் லக் சகி, ராங் தே, மரக்கார்: அரபிக்கடலின் சிம்ஹம், வாஷி, சானி காயிதம், அண்ணாத்த, சர்கார் வாரி பாடா, ஐனா இஸ்தம் நுவ்வு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், இசையமைப்பாளர் அனிருத்துக்கும், கீர்த்தி சுரேஷூக்கும் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. உண்மையில் அனிருத் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருக்கின்றனர்.

சமீபத்தில் அனிருத் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் பார்ட்டியில் கூட கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டுள்ளார். பொதுவாக எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், இருவரும் ஒருவருக்கொருவர் பக்கத்தில் தான் உட்கார்ந்திருப்பார்கள். புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியாக இருந்தாலும் கூட அனிருத் அருகில் தான் கீர்த்தி சுரேஷ் இருப்பாராம். எனினும், கீர்த்தி சுரேஷ் தரப்பில் இருந்து திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 6

0

0