விஜய் பாட்டுக்கு செம்மையா டான்ஸ் ஆடி வாழ்த்து சொன்ன கீர்த்தி சுரேஷ் – வீடியோ வைரல்!

23 June 2021, 11:37 am
Keerthi Suresh Dance - Updatenews360
Quick Share

“ஆரம்பத்துல என் முகத்தை பார்க்க காசு கொடுத்து Theaterக்கு வரணுமானு விமர்சனம் எழுதி சிரிச்சாங்க” அப்படி விமர்சனம் எழுதின அதே வார இதழ் Cover போட்டோவாக விஜயின் போட்டோவை கேட்டது தான் இந்த தளபதியின் முதல் சாதனை. நாளைய தீர்ப்பில் ஆரம்பிச்சு மாஸ்டர் வரை இவர் சந்திக்காத விமர்சனங்களை கிடையாது.

எல்லா நடிகர்களுக்கும் தோல்வி படங்கள் வருவது சகஜம். ஆனாலும் அந்த தோல்வியில் தன்னை விட்டுப் போகாத ரசிகர்கள் கிடைப்பதுதான் வரம். விஜய்க்கு அப்படி ஒரு வரம் கிடைத்தது என்று சொல்வதைவிட, தோல்வி படம் தந்தால் கூட அதை இன்னொரு வெற்றிப்படத்தினால் அந்த தோல்வி விமர்சனத்தை முறியடிக்கும் சக்தியாக ரசிகர்களுக்கு விஜய் கிடைத்தது தான் வரம். இந்த காலகட்டத்தில் அவர் சுமாரான படங்களில் நடித்தாலும் 300 கோடி வசூலித்தது என்றால் அவருடைய ரேஞ்ச், அந்தஸ்து, பவர், என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இருக்கும்போதே சூப்பர் ஸ்டார் விஜய் என்று சொல்ல வைத்தது எந்த நடிகரும் இதுவரை செய்யாத சாதனை.

இந்த நிலையில் நேற்று பிறந்தநாளை கொண்டாடிய விஜய்க்கு, நடிகர், நடிகைகள் பலர் தங்களது, வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார்கள், அதில் விஜய்யுடன் பைரவா, சர்கார் உள்ளிட்ட படங்களில் நடித்தவரும், தமிழ் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகையுமான கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய் நடித்த ‘யூத்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’ஆல்தோட்ட பூபதி’ என்ற பாடலுக்கு செம நடனமாடி தனது வாழ்த்தை விஜய்க்கு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 421

8

3