இதுக்கு மேலயும் சும்மா இருக்க முடியாது.. கவர்ச்சியை காட்டு காட்டுனு காட்டும் கீர்த்தி சுரேஷ்…!!

Author: Babu Lakshmanan
13 June 2022, 12:34 pm
keerthi suresh -updatenews360
Quick Share

விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது. அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், கடந்த வருடத்தில் கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். தற்போது செல்வராகவனுடன் சாணிக் காகிதம் என்னும் படத்தில் நடித்துள்ளார்.

இதனிடையே அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தல் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனை ரசிப்பதற்கென்றே ரசிகர்கள் பட்டாளமே காத்துக்கிடக்கிறது. வழக்கமாக, அடக்கம் ஒடுக்கமாக நடித்து வரும் கீர்த்தி, சர்காரு வாரி பட்டா படத்தில் கவர்ச்சியை வாரி இறைத்திருந்திருந்தார்.

இதைத் தொடர்ந்து, தனது சமூகவலைதள பக்கங்களிலும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்துள்ளார். இதனை பார்க்கும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

மேலும், மார்க்கெட்டில் இருக்க வேண்டுமானால், கவர்ச்சிக்கு தாராளம் காட்ட வேண்டும் என்பது அம்மணிக்கு லேட்டாக புரிய வந்துள்ளதாக சிலர் முனுமுனுத்து வருகின்றனர்.

Views: - 560

2

2