20 வயசு நடிகருடன் காதல்…. விஜய்யை வம்பிற்கு இழுத்த கீர்த்தி சுரேஷ்!

Author:
27 July 2024, 1:18 pm

முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ் மலையாள திரைப்படங்களில் 2000 காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். இவர் தமிழ் சினிமாவில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். அதையடுத்து பல்வேறு திரைப்படங்களில் வெற்றிகள் குவித்த கீர்த்தி சுரேஷ் முன்னணி நட்சத்திர நடிகையாக தமிழ் சினிமாவில் இடம் பிடித்தார்.

இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் “ரகு தாத்தா” இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் வித்தியாசமான கதைகளத்தில் நடித்திருக்கிறார். சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில். கீர்த்தி சுரேஷுடன் எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.

வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரமோஷனுக்காக கீர்த்தி சுரேஷ் மற்றும் பட குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷிடம் 20 வயது நபர் ஒருவரை காதலிப்பதாக வெளிவந்து தீயாய் பரவும் செய்தி பற்றி கேள்வி கேட்டதற்கு… நடிகர் விஜய் சொன்னது போல் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாக விடும்.

எனவே அதை புறக்கணித்து விடுவோம். நடிப்பு குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு நடிகையாக அதை என்னை மேலும் மேம்படுத்தும். ஆனால், இது போன்ற வதந்திகள் என்னை பெரிதாக பாதிக்காது. அதை நான் கண்டுகொள்ளவும் மாட்டேன் என கூறி இருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!