நயன்தாராவை டம்மி ஆக்கணும்… கோடியில் பணம் சம்பாதிக்கணும் – பேராசையில் பிரபல நடிகை!

Author: Shree
16 July 2023, 1:46 pm

கேரளாவை பூர்விகமாக கொண்டவரான கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 2000களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013 ஆண்டில் கீதாஞ்சலி எனும் மலையாளத் திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானார்.

பின்னர் இது என்ன மாயம் திரைப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியான நடித்து பிரபலமானார். தொடர்ந்து ரஜினி முருகன் , தொடரி, ரெமோ, பைரவா, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். பல வருடங்களாக சினிமாவில் இருந்து வரும் கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

இதை சுதாரித்துக்கொண்ட கீர்த்தி நாம் ஏன் இன்னும் குறைத்த சம்பளம் வாங்கணும்? நானும் நயன்தாராவுக்கு ஈடாக தானே ஹிட் கொடுக்கிறேன். அவர் தற்போது கிட்டத்தட்ட ரூ. 10 கோடி சம்பளம் வாங்குகிறார். அப்படி இரும்போது நான் எந்த விதத்தில் குறைந்தவளாக இருக்கிறேன் என எண்ணி ரூ.3 கோடியாக இருந்த தனது சம்பளத்தை மாமன்னன் படத்திற்கு பிறகு ரூ. 6 கோடியாக உயர்திக்கொண்டுள்ளாராம். நயன்தாரா தோல்வியே கொடுத்தாலும் அவருக்கு பணம் கொட்டிக்கொடுக்க முன் வரும் தயாரிப்பாளர்கள் கீர்த்தி சுரேஷுக்கு ரூ. 6 கோடி தருவதற்கு அவ்வளவு யோசிக்கிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!