கிளாமர் என்றால் அழகு.. கவர்ச்சிக்கு பச்சை கொடி காட்டுகிறாரா கீர்த்தி சுரேஷ்..? அவரே சொன்ன பதில் ..!

Author: Rajesh
14 May 2022, 5:19 pm

முன்னணி நடிகைகள் பலரும் தற்போது, கவர்ச்சிக்கு மாறி உள்ளனர். ஒரு பாடலுக்கு அரைகுறை உடையில், கவர்ச்சியாக குத்தாட்டம் ஆடவும் கதாநாயகிகள் சில படங்களில் ஒப்பந்தம் ஆகி வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் திரைக்கு வந்த புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலில், சமந்தா ஒரு பாடலுக்கு ஆடிய கவர்ச்சி நடனம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், குடும்ப பாங்கான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வரும் கீர்த்தி சுரேசிடம் கவர்ச்சியின் வேடங்களில் நடிக்க போவதாக தகவல்கள் வெளிவருகிறேதா உண்மையா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்து கீர்த்தி சுரேஷ், கிளாமர் என்றால் அழகாக இருக்கிறது என்றும் மேலும் கிளாமரை தவறான கண்ணோட்டத்தில் மிகைப்படுத்திவிட்டோம் என்றார். தற்போது, உள்ள சூழ்நிலையில் கவர்ச்சியாக நடிக்கும் திட்டம் இல்லை என்றும் கூறி இருக்கிறார்.

தொடர்ந்து, உடல் எடை குறைத்தது குறித்து கேட்கப்பட்டதற்கு, தற்போதைய தோற்றத்தில் நான் வசதியாக இருக்கிறேன், மேலும் நான் அணிய விரும்பும் அனைத்து வகையான ஆடைகளையும் இப்போது அணிய முடியும், இது முன்பு அது சாத்தியமற்றதாக இருந்தது என்றும் கூறினார். மேலும் நடிப்புக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரங்களின் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?