இதெல்லாம் வேலைக்கு ஆகுமா மேடம்? கையில் துப்பாக்கியுடன் கீர்த்தி சுரேஷ்! வெளிவந்த புதிய அறிவிப்பு!

Author: Prasad
11 June 2025, 7:01 pm

திருமணத்திற்குப் பின்னும் மார்க்கெட் குறையாத நடிகை

பொதுவாக தமிழ் சினிமாவில் ஒரு நடிகைக்கு திருமணம் ஆகிவிட்டால் அதன் பின் சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவிடுவார்கள், அல்லது அவர்களின் மார்க்கெட் குறைந்துவிடும். ஆனால் அதற்கெல்லாம் விதிவிலக்காக நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்ற நடிகைகள் உள்ளனர். இப்போதும் அவர்களின் திரைப்படங்களுக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் நடித்த புதிய திரைப்படத்தின் அறிவிப்பு டீசர் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. 

keerthy suresh starring revolver rita movie announcement teaser release

துப்பாக்கியுடன் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் “ரிவால்வர் ரீட்டா” என்ற திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்துள்ளார். இத்திரைப்படத்தை ஜே கே சந்துரு என்பவர் இயக்கியுள்ளார். இதில் கீர்த்தி சுரேஷுடன் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இதில் கீர்த்தி சுரேஷ் கையில் துப்பாக்கியுடன் மாஸ் ஆக வலம் வருகிறார். கீர்த்தி சுரேஷின் ஆக்சன் அதிரடி திரைப்படமாக இத்திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!