மிரள வைக்கும் KGF பட இயக்குனரின் அடுத்த படத்தின் First Look ! எப்போ ரிலீசுன்னு தெரியுமா ?

28 February 2021, 4:14 pm
Quick Share

கன்னட சினிமாவில் முதன் முதலாக இந்த அளவு வரவேற்பை பெற்ற படம் கேஜி எஃப் படம்தான் என்றும் சொல்லும் அளவு மாபெரும் வெற்றி பெற்றது. கன்னடத்தில் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டது. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் கே ஜி எஃப் 2 என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.

சில நாட்களுக்கு முன் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் யூடியூபே அதிரவைத்தது. தற்போது இந்த படத்தின் இயக்குனர் அடுத்த படத்தை இயக்க தயாராகிவிட்டார் இந்த முறை அவருடன் கூட்டணி சேருவது பிரபாஸ் என்ற அறிவிப்பு டோலிவுட் வட்டார கொண்டாட்டமாக மாற்றியிருக்கிறது.

பாகுபலி படத்திற்குப் பின் பிரபாஸ் மார்க்கெட் வேற லெவல் ஆனது. தெலுங்கு சினிமாவில் சூப்பர் ஸ்டாராக மாறினார். ஆனால் அடுத்து நடித்த சாஹோ படம் வெற்றி பெறவில்லை. தற்போது கே ஜி எஃப் இயக்குனருடன் கூட்டணி சேர்ந்து உள்ளார். அந்தப் படத்திற்கு சலார் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பை வெளியிட்டுள்ளது படக்குழு.

Views: - 2

9

3