தமிழில் கேட்கப்போகும் கேஜிஎஃப்பின் பிரம்மாண்ட இசை? இது செம மேட்டரா இருக்கே…

Author: Prasad
21 August 2025, 11:49 am

அதகளம் செய்த கேஜிஎஃப்

கன்னடத்தில் யாஷ் நடித்த “கேஜிஎஃப்”, “கேஜிஎஃப் 2” ஆகிய திரைப்படங்கள் வேற லெவலில் ஹிட் அடித்தது. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைக்கும் அளவுக்கு மிகப் பெரிய வெற்றி பெற்ற அத்திரைப்படங்களை பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார். அத்திரைப்படங்களுக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது அதன் இசைதான். அந்த வகையில் “கேஜிஎஃப்”, “கேஜிஎஃப் 2” போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்தான் ரவி பஸ்ருர். இவர் 2014 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த “உக்ரம்” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து கன்னடம், ஹிந்து, துலு போன்ற மொழிகளில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த நிலையில்தான் இவர் கோலிவுட்டில் அறிமுகமாகப்போகிறார். 

Kgf music director ravi basrur entry in kollywood in arjun movie

ஆக்சன் கிங் அர்ஜுனின் புதிய படம்

ஆக்சன் கிங் அர்ஜுன் ஒரு புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இத்திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இத்திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுபாஷ் கே ராஜ் இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. 

இந்த நிலையில் இத்திரைப்படத்திற்கு “கேஜிஎஃப்” இசையமைப்பாளர் ரவி பஸ்ருர் இசையமைக்கிறார். இதன் மூலம் இவர் தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுக்கிறார். இச்செய்தி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!