ஆசைல மண்ணள்ளி போட்டுட்டீங்களே- கியாரா அத்வானியின் பிகினி காட்சிகளை நீக்கிய சென்சார் போர்டு
Author: Prasad9 August 2025, 6:21 pm
கூலிக்கு போட்டியாக வரும் திரைப்படம்?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதே நாளில் “கூலி” திரைப்படத்திற்கு போட்டியாக ஹிரித்திக் ரோஷன், ஜூனியர் என் டி ஆர், கியாரா அத்வானி ஆகியோரின் நடிப்பில் உருவான “வார் 2” திரைப்படமும் வெளியாகிறது.
“வார் 2” திரைப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். ஆதித்யா சோப்ரா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். வட இந்தியாவில் இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு உள்ளது. இதனிடையே இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆவான் ஜாவான்” என்ற பாடல் வெளியானது. இதில் கியாரா அத்வானி ஒரு காட்சியில் பிகினி உடையில் வலம் வந்து ரசிகர்களை கொள்ளைகொண்டார்.
இப்பாடல் வெளியாவதற்கு முன்பே கியாரா அத்வானியின் பிகினி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் சென்சார் போர்டு இக்காட்சிகளை நீக்கும்படி கூறியுள்ளதாக தகவல் வெளிவருகிறது.

கத்திரி போட்ட சென்சார் போர்டு
ஆபாசமான காட்சிகளை படத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய தணிக்கை வாரியம் வலியுறுத்தியதன் பெயரில் இப்பாடலில் இடம்பெற்ற கியாரா அத்வானியின் 9 வினாடி கவர்ச்சிகரமான பிகினி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாம். இச்செய்தி கியாரா அத்வானி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
இக்காட்சியை திரையில் பார்க்க இளம் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த நிலையில் தற்போது பிகினி காட்சிகள் நீக்கப்பட்டுள்ளது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
