விஜய்யை தொடர்ந்து அரசியலுக்குள் நுழையும் மற்றொரு முன்னணி நடிகர்? இது செம டிவிஸ்ட்…
Author: Prasad2 September 2025, 12:42 pm
புதிய பாதையை தேர்ந்தெடுத்த விஜய்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக உருவெடுத்துள்ளார். வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளராக விஜய் போட்டியிடவுள்ளார். தேர்தலை சந்திப்பதற்கான செயல்பாடுகளில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் விஜய். இன்னும் சில தினங்களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் விஜய். இந்த நிலையில் விஜய்யை தொடர்ந்து பிரபல முன்னணி நடிகரான ஒருவர் அரசியலுக்கு வருவது குறித்து பேசியுள்ளார்.

நான் அரசியலுக்கு வந்துவிட்டால்?
கன்னட சினிமாவின் டாப் நடிகராக வலம் வருபவர் கிச்சா சுதீப். விக்ரம் நடித்த “சேது” படத்தின் கன்னட ரீமேக்கான “ஹுச்சா” என்ற திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். “சேது” படத்தில் விக்ரமை எப்படி சீயான் என்று அழைப்பார்களோ அதே போல் “ஹுச்சா” படத்தில் இவரை கிச்சா என்று அழைப்பார்கள். இதன் காரணமாக இவருக்கு கிச்சா சுதீப் என்று பெயர் வந்தது.
இவர் தமிழில் விஜய்யின் “புலி” படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய கிச்சா சுதீப், “சில நேரங்களில் அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தை சிலர் தூண்டுகிறார்கள். ஆனால் தற்போதைக்கு அரசியலுக்கு வருவதற்கான எண்ணம் இல்லை. ஆனால் ஒரு வேளை அரசியலுக்கு வந்துவிட்டால் என்னுடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பேன்” என கூறினார்.

கிச்சா சுதீப் கடந்த 2023 ஆம் ஆண்டு கர்நாடகா மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை வெளிப்படையாக ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
