Video, Photos என ஒவ்வொன்னுக்கும் ஒரு ரேட்.. App மூலம் இவ்வளவு சேட்டைகள் செய்கிறாரா கிரண்.?

Author: Rajesh
11 June 2022, 6:58 pm

விக்ரமின் ஜெமினி திரைப்படத்தில் ஹீரோயினாக தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதன்பிறகு அஜித்தின் வில்லன், கமல்ஹானின் அன்பே சிவம், பிரசாந்தின் வின்னர் எனும் திரைப்படங்களிலும் அவர் ஹீரோயினாக நடித்திருந்தார்.

அதன்பிறகு ஒரு சில திரைப்படங்களில் கிரண் நடித்திருந்தாலும், தற்போது படவாய்ப்புகள் இன்றி இணையத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை அதுவும் மிகவும் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் கிரண்.

தற்போது புதிய பட வாய்ப்புகள் அவருக்கு கிடைப்பதில்லை இதன் காரணமாகவோ என்னவோ, தற்போது கிரண் எனும் ஓர் இணைய தளத்தை உருவாக்கி உள்ளார். அதில் இன்று ஒரு லைவ் வீடியோ வெளியிட உள்ளார். அந்த வீடியோவை பார்ப்பதற்கு 499 ரூபாய் நீங்கள் செலுத்தி விட வேண்டும். அதேபோல் 15 நிமிடம் ஆடியோ கால் பேசுவதற்கு பத்தாயிரம் ரூபாய் (9,999 ரூபாய்) செலுத்த வேண்டும். அப்படி செலுத்தினால் கிரணுடன் நீங்கள் பேசலாம் என்று அந்த தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த இணையதளம் போலியானது, ரசிகர்களிடம் பணம் பறிக்க இந்த மாதிரி யாரோ செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டதே கிரண் தான். பட வாய்ப்பு இல்லை என்பதால் இப்படி இறங்கி விட்டார் என்று பலரும் வருத்தத்தில் இருக்கின்றனர். சிலர் அப்படி பணம் கட்டி என்ன தான் சொல்கிறார் என பார்த்து விடலாமா என்று யோசனையிலும் இருக்கின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!