கிஸ்ஸா 47 பாடலை குழி தோண்டி புதைத்த சந்தானம்! இனி சர்ச்சை எல்லாம் கிடையாது கிளம்புங்க…
Author: Prasad15 May 2025, 12:46 pm
சர்ச்சையை கிளப்பிய பாடல்
சந்தானம் கதாநாயகனாக நடித்த “டிடி நெக்ஸ்ட் லெவல்” திரைப்படம் நாளை (மே 16) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். நடிகர் ஆர்யா இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இதில் சந்தானத்துடன் கீதிகா திவாரி, யாஷிகா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

இதனிடையே இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “கிஸ்ஸா 47” என்ற பாடலில் உள்ள “ஸ்ரீனிவாசா கோவிந்தா” என்று தொடங்கும் வரிகள் இந்துக்களின் மனதை புண்படுத்துவது போல் அமைக்கப்பட்டுள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பின. திருப்பதியைச் சேர்ந்த ஜனசேனா கட்சியினர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானுபிரகாஷ் ரெட்டி ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு சந்தானத்திற்கு நோட்டீஸ் அனுப்பினார்.
பாடலை தூக்கிய படக்குழு
இவ்வாறு எதிர்ப்புகள் பலமாக கிளம்பியுள்ள நிலையில் “கிஸ்ஸா 47” பாடலை நீக்க முடிவு செய்துள்ளது படக்குழு. இது குறித்த அதிகாரப்பூர்வ செய்திகளே வெளிவந்துள்ளது. இனி இத்திரைப்படம் எந்த சர்ச்சைகளும் இன்றி நாளை திரையரங்குகளில் வெளிவரவுள்ளது.
