பெத்தவன் செத்ததுக்கு கூட போகல.. பணத்திற்காக இப்படி செய்த கோவை சரளா?..

Author: Vignesh
8 May 2024, 10:38 am
kovaisarala
Quick Share

நடிகை கோவை சரளா தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். இதுவரை 750 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ‘சிறையில் பூத்த சின்ன மலர்’ மற்றும் ‘வில்லு’ படங்களில் பாடகியாகவும், ‘உழைத்து வாழ வேண்டும்’ என்ற படத்தின் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான ‘தமிழ்நாடு மாநில திரைப்பட விருதையும்’, ‘பூவெல்லாம் உன் வாசம்’ மற்றும் ‘ஒரி நீ பிரேம பங்கரம் கனு’ என்ற படங்களில் சிறந்த பெண் நகைச்சுவை நடிகைக்கான ‘நந்தி விருதையும்’ பெற்றுள்ளார்.

kovai sarala-updatenews360

மேலும் படிக்க: சார் விட்டுருங்கன்னு சொன்னால்.. புலம்பித்தள்ளிய முத்தழகு சீரியல் நடிகை..!

நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் தொலைக்காட்சியில் தனது திறமையை நிருபித்துயுள்ளார். அவரது ‘என்ன இங்க சத்தம்’, ‘என்னை ஜப்பான்ல கூப்பிட்டாகோ’, ‘சிநேகிதனய்ய் சிநேகிதனய்ய் ர்ர்ரகசிய சிநேகிதனய்ய்’, ‘தொறை இங்க்லீஸ் எல்லாம் பேசுது’ போன்ற வசனங்கள் இன்று பிரபலம். திரையுலகில் சாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்த அவருக்கு, ‘முந்தானை முடிச்சு’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க செய்து அறிமுகம் செய்து வைத்தார் பாக்கியராஜ்.

kovai sarala-updatenews360

கோவை சரளா இன்று வரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. பரந்த உள்ளமும் இறக்க குணமும் நிறைந்தவர். தனது உடன்பிறந்தவர்களின் பிள்ளைகளைத் தன் பிள்ளைகளாக நினைத்து அவர்களைக் கண்டிப்போடு வளர்த்து வருகிறார். பல ஏழைக்குழந்தைகளை படிக்க வைத்து வருகிறாராம் கோவை சரளா. முதியோர் இல்லங்களுக்கும் அடிக்கடி சென்று உதவிகளும் செய்து வருகிறாராம்.

vadivelu - updatenews360

மேலும் படிக்க: கோபிகாவா இது? எலும்பும் தோலுமாக ஆளே அடையாளம் தெரியாதது போல் மாறிட்டாரே..!

மனோரமாவிற்கு அடுத்தபடியாக ஒரு தலைச்சிறந்த நகைச்சுவையாளினியாகத் திகழும் கோவை சரளா தென்னிந்தியத் திரையுலகிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று சொன்னால் அது மிகையாகாது. 25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் இருந்து வரும் அவரது இடத்தை இனி எந்தவொரு நகைச்சுவை நடிகையும் ஈடு செய்ய முடியாது என்பதே நிதர்சனமான உண்மை.

kovai sarala-updatenews360

இந்நிலையில், 58 வயதை கடந்த நிலையில் கோவை சரளா திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாகவே இருந்து வருகிறார். இவரது குடும்பத்தின் மூத்த மகளான கோவை சரளா, உடன் பிறந்த நான்கு சகோதரிகளின் திருமணத்திற்கு உதவி செய்துள்ளார். மேலும், அவர்களின் குழந்தைகளின் கல்வி உட்பட அனைத்து தேவைகளையும் கோவை சரளாதான் கவனித்துக் கொண்டார். மற்றவர்களுக்கு உதவுவதற்காக தனது வாழ்நாளை செலவிட விரும்புவதாக கோவை சரளா தெரிவித்து இருந்தார்.

kovai sarala-updatenews360

மேலும் படிக்க: பட வாய்ப்பிற்காக அதை கட்டுப்படுத்திக்கிட்டு இருக்கேன்.. ரகசியத்தை உடைத்த சினேகா..!

இந்நிலையில், தற்போது கோவை சரளா நடித்த அரண்மனை 4 திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், கோவை சரளா தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் பற்றி பேசியிருக்கிறார். அதாவது, கோவை சரளா ஊட்டியில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தபோது அவருடைய அப்பா திடீரென இறந்து விட்டாராம். கோவை சரளா நடித்து வந்த அந்த படத்தை எடுத்தது ஒரு சின்ன நிறுவனம் ஷூட்டிங்கை நிறுத்த முடியாத நிலையில் இருந்துள்ளனர். இதனால், அப்பா இறப்பிற்கு கூட செல்ல முடியவில்லை. ஆனால், தான் பணத்திற்காக தான் இப்படி செய்தேன் என அந்த சமயத்தில் மோசமாக அனைவரும் பேசியதாக கோவை சரளா வருத்தத்துடன் தெரிவித்திருந்தார்.

Views: - 136

0

0