இனிமேல் ஒரு உசுரு கூட போகக்கூடாது.. மலைகிராம மக்களின் நிஜ நாயகன் KPY பாலா..! (வீடியோ)

Author: Vignesh
18 August 2023, 2:30 pm

விஜய் தொலைக்காட்சியில் இப்போதெல்லாம் எந்த ஒரு நிகழ்ச்சியை எடுத்தாலும், பாலா அதில் கண்டிப்பாக இருப்பார். அந்த அளவிற்கு தனது ரைமிங் காமெடிகள் மூலம் மக்களை வெகுவாக கவர்ந்து விட்டார்.

டிவி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லாது தனியார் மற்றும் வெளிநாட்டு நிகழ்ச்சிகளிலும், கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி வருகிறார் பாலா. இப்போது பாலா செய்துள்ள ஒரு விஷயத்தால் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

bala-updatenews360 k

அதாவது, ஈரோடு மாவட்டம் கடம்புறை அடுத்து குன்றி உட்பட 18 மலை கிராமத்தில் சுமார் 8,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக பல கிலோமீட்டர் தாண்டி வந்து தான் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கின்றனர்.

bala-updatenews360 k

மக்களின் மருத்துவ அவசர உதவி காலத்தில் பயன்படும் வகையில் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான இலவச ஆம்புலன்ஸை வழங்கி உள்ளார் பாலா. இதை அவர் தனது சொந்த பணத்தின் மூலமாக வழங்கியுள்ளார். அதன் தொடக்க விழா ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!