‘நாட்டாமை’ படத்தில் மிச்சர் சாப்பிட்ட நபர் யார்..? கே.எஸ்.ரவிக்குமார் பகிர்ந்த சுவாரசிய தகவல்.!

Author: Selvan
8 February 2025, 1:55 pm

மிக்சர் மாமா கேரக்டர் உருவான கதை

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1994ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் நாட்டாமை,இப்படத்தில் நடிகர் சரத் குமார் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார்.மேலும் குஷ்பூ,மீனா,விஜயகுமார்,பொன்னம்பலம் என பல நட்சித்திர பட்டாளங்கள் நடித்திருப்பார்கள்.

இதையும் படியுங்க: ‘சவதிகா’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட தாத்தா…வைரலாகும் தியேட்டர் வீடியோ.!

படம் வெளியாகி 30 வருடங்கள் கழிந்தாலும் இன்றும் டிவியில் இப்படத்தை போட்டால் மக்கள் குடும்பத்தோடு உற்சாகமாக பார்த்து வருகின்றனர்.படத்தில் செந்தில் கவுண்டமணி காமெடி சோசியல் மீடியாவில் மீம்ஸ் கன்டென்ட் ஆக இருக்கிறது.

Mixer Mama Scene Explained

அதில் ஒரு காட்சியில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் போது,அங்கு நடக்கும் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்காமல்,ஒரு நபர் உட்கார்ந்து மிக்சர் சாப்பிட்டு இருப்பார்.அந்த சீன் பல வருடங்களுக்கு பிறகு இணையத்தில் வைரல் ஆகி ட்ரோல் ஆகி வருகிறது.

இந்த நிலையில் கே எஸ் ரவிக்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில்,அந்த மிக்சர் மாமா யார் என்ற தகவலை சுவாரசியமாக பகிர்ந்திருப்பார்.அவர் அந்த படத்தில் ஒரு எலெக்ட்ரிஷன் ஆக வேலை பார்க்க கூடிய நபர்,நான் இந்த லைட்டை ஆன் செய் அல்லது ஆப் பன்னு என்று சொல்லுவேன்,அவரும் அந்த இடத்தை விட்டு நகராமல் அந்த வேலையை மட்டும் செய்வார்,அவரிடம் வேறு வேலை கொடுத்தால் நான் எலெக்ட்ரிஷன்,என கூறி ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பார்.

அதனால் அவரை கூப்பிட்டு நெற்றியில் ஒரு பட்டையை போட்டு,கையில் மிக்சரை கொடுத்து அந்த சீனில் உட்கார வச்சோம் என நகைச்சுவையாக கூறியிருப்பார்.படம் ரிலீஸ் ஆகி பல வருடத்திற்கு பிறகு அந்த காட்சி மீம்ஸுகளாக பரவி வருவதை பார்த்து சந்தோசம் அடைந்து,என்னை வீட்டில் வந்து பார்த்தார் என கே எஸ் ரவிக்குமார் அந்த பேட்டியில் தெரிவித்திருப்பார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?