வில்லன் இல்லாத படம்… ஆனா, ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது : வாரிசு பட சீக்ரெட்டை உடைத்த பிரபல நடிகை..!

Author: Vignesh
7 December 2022, 4:45 pm
varishu-updatenews360
Quick Share

சென்னை: பொங்கல் ஸ்பெஷலாக விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படத்தில் குஷ்பூ விஜய்யுடன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.

வாரிசு படத்தில் விஜய்யுடன் நடித்தது குறித்து மனம் திறந்துள்ள குஷ்பு, முக்கியமான அப்டேட் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

1999ம் ஆண்டு வெளியான மின்சார கண்ணா படத்தில் விஜய் – குஷ்பூ இருவரும் இணைந்து நடித்திருந்தனர். அதன்பின்னர் விஜய் – குஷ்பூ தற்போது வாரிசு படத்தில் நடித்துள்ளனர்.

Kushboo - Updatenews360

பொங்கல் ஸ்பெஷலாக விஜய் ஹீரோவாக நடித்துள்ள வாரிசு திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. வம்ஷி பைடிபள்ளி இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் வாரிசு படத்தில் குஷ்பூ நடிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகத நிலையில், பல நாட்களுக்குப் பிறகு தான் அவரும் விஜய்யுடன் நடித்துள்ளது தெரியவந்தது.

இந்நிலையில், தனியார் யூடியூப் சேனலுக்கு வாரிசு படத்தில் நடித்துள்ளது குறித்து குஷ்பூ பேட்டியளித்துள்ளார். அதில், வாரிசு படத்தில் விஜய் வில்லன் யார் என்பதை பற்றியும் பேசியுள்ளார்.

varisu-third-look-poster-thalapathy-vijay

அதன்படி, வாரிசு படத்தில் விஜய்க்கு வில்லன் கிடையாது என குஷ்பூ தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் சூழல்கள் தான் விஜய்க்கு வில்லனாக அமையுமே தவிர, அவருக்கு வில்லன்கள் யாரும் கிடையாது என்றுள்ளார்.

மேலும், இந்தப் படத்தில் அண்ணன், தம்பி கேரக்டர்கள் எல்லாமே நம்முடைய ரியல லைஃபில் பார்த்ததாகவே இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால் ஆக்‌ஷன் ட்ரீட் உண்டு மேலும், இந்த படத்தில் வரும் பாத்திரங்கள் எல்லாமே ரசிகர்களின் மனதுக்கு ரொம்பவே டச் ஆகும்.

இதுஒரு ஃபீல்குட் படமாக இருக்கும் என குஷ்பூ தெரிவித்துள்ளார். முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் வாரிசு படம் குறித்து பேசியிருந்த குஷ்பூ, “வாரிசு படத்தில் எனக்கு கேமியோ ரோல் தான், ஆனால் நான் வரும் காட்சிகள் அனைத்தும் விஜய்யுடன் மட்டுமே இருக்கும்” எனக் தெரிவித்திருந்தார். வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது.

kushboo-updatenews360

ஆனால், விஜய் அதை பொருட்படுத்தாமல் ஹை ரிஸ்க் எடுத்து ஒரு சண்டைக் காட்சியில் நடித்துள்ளார்” எனக் கூறியிருந்தர்.

இதனால், வாரிசு படத்தில் விஜய்க்கு வில்லன் கிடையாது என்றாலும் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சமே இருக்காது எனத் தெரிகிறது. வாரிசு தரமா இருக்கும் மேலும், வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் மற்ற நடிகர்களுக்காக தனது உடல்நலம் பற்றி கவலைப்படாமல் விஜய் நடித்ததாகவும் நடிகை குஷ்பூ மனம் திறந்துள்ளார்.

வாரிசு படத்தின் சண்டைக் காட்சி குறித்து குஷ்பூ கொடுத்துள்ள அப்டேட், விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது. முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் குஷ்பூ எடுத்துக்கொண்ட செல்ஃபி வைரலானது குறிப்பிடத்தக்கது.

Views: - 492

2

0