குற்றம் 23 காம்போ இஸ் பேக்

5 December 2019, 9:23 pm
Kutram 23 Is Back_updatenews360
Quick Share

குற்றம் 23′ படத்தைத் தொடர்ந்து மீண்டும் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. தற்போது இவர்கள் இருவரும் இணையபோவாதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அருண் விஜய், மஹிமா நம்பியார், அரவிந்த் ஆகாஷ், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘குற்றம் 23’. இந்தர் குமார் தயாரித்த இந்தப் படம் 2017-ம் ஆண்டு வெளியானது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்துக்குப் பிறகு அறிவழகன் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க புதிய படம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியானது. ஆனால், அந்தப் படம் தொடங்கப்படவில்லை. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாயகர்களிடம் கதை சொல்லி பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் அறிவழகன்.

இறுதியில், அறிவழகன் கூறிய கதையில் நடிக்க அருண் விஜய் சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டு. தபோது சீக்கிரம் ஷூட்டிங் போகவுள்ளனர். தற்போது, ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான சினம் படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். அதனைத் தொடர்ந்து அறிவழகன் படத்தைத் தொடங்குவார் எனத் தெரிகிறது.