இந்தியாவுக்கு அடுத்த பிளேயர் ரெடி? கிரிக்கெட் விளையாடும் விஜய் சேதுபதி!

23 January 2021, 4:02 pm
Quick Share

நடிகர் விஜய் சேதுபதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் மாஸ் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. . வருடத்திற்கு 5க்கும் அதிகமான படங்களில் நடித்து அதனை வெளியிட்டு வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு பேட்ட, சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத், மார்கோனி மதை, சைரா நரசிம்ஹா ரெட்டி, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்து அதனை வெளியிட்டுள்ளார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதில், தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கக்கூடியவர்.

ஹீரோவாக மட்டுமல்லாமல், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம், திருநங்கை கதாபாத்திரம் என்று பல அவதாரம் எடுத்துள்ளார்.
ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தின் மூலம் வில்லன் அவதாரம் எடுத்தார். இந்தப் படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து அண்மையில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்துள்ளார். பவானி கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிக்கு ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.

இந்த நிலையில், லாபம் படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் சேதுபதி கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், சேரை ஸ்டம்பாக வைத்து இடது கையில் பேட் பண்ணும் வீடியோ இடம் பெற்றுள்ளது. இயக்குநர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன், சாய் தன்ஷிகா, ரமேஷ் திலக், கலையரசன், ஜகபதி பாபு ஆகியோர் உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் படம் தான் லாபம். அரசியல் த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி சமூக ஆர்வலராக நடித்துள்ளார்.

இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதியின் 7 சிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. விரைவில், இந்தப் படம் திரைக்கு வருகிறது. தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் துக்ளக் தர்பார், கடைசி விவசாயி, உப்பென்னா, மாமனிதன், யாதும் ஊரே யாவரும் கேளிர், காத்துவாக்குல ரெண்டு காதல், மும்பைகார், இடம் பொருள் ஏவல் என்று பல படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 7

0

0