அட நம்ம லட்சுமி மேனனா இது..? என்ன இப்படி ஆகிட்டாங்க..! புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்..!

Author: Vignesh
24 February 2023, 10:45 am
lakshmi menon - updatenews360.png 2
Quick Share

தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும் பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கியவர் லட்சுமி மேனன். அந்த வகையில் இவர் 2011ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சிகள் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரைப் பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

இதனைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபாகரன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இவர் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர் பெருமக்களை கவர்ந்தர்.

மேலும் தான் நடித்த முதல் திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பை பெற்ற நமது நடிகை சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.

அதன் பிறகு கும்கி, குட்டி புலி, பாண்டியநாடு, நான் சிவப்பு மனிதன் பல திரைப்படங்களில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

ஆனால் சமீப காலமாக இவருக்கு சரியான பட வாய்ப்பு இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடிக்க உள்ளார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் கடைசியாக விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான புலிகுத்து பாண்டியன் என்ற திரைப்படத்தில் தான் நடித்திருந்தார். அதன்பின் ஒருசில படங்களில் கமிட்டாகிய லட்சுமி மேனன் உடல் எடையை அதிகரித்ததால் வாய்ப்பினை இழந்து வந்தார்.

தற்பொழுது வாய்ப்பு இல்லாத காரணத்தினால் அறிமுக இயக்குனர் முருகேஷ் பூபதி இயக்கத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடிக்க இருக்கும் திரைப்படம் ஒன்றில் எமோஷனல் காதல் காமெடி என மூன்றும் கலந்த திரைப்படம் ஒன்றில் யோகி பாபு மற்றும் லட்சுமிமேனன் காதலராக நடிக்க உள்ளார்கள்.

lakshmi menon - updatenews360

அதன்பின் ஏஜிபி என்ற படத்தில் நடித்தார். தற்போது வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் சந்திரமுகி 2வில் நடித்தும் வந்துள்ளார்.

lakshmi menon - updatenews360.png 2

சந்திரமுகி 2 படக்குழுவினருடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு லட்சுமி மேனனை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகிறார்கள்.

lakshmi menon - updatenews360.png 2
Views: - 492

2

0