“கமல் நடத்தும் Big Boss நிகழ்ச்சி ஒரு ஷிட்”- லட்சுமி மேனன் ஆவேச பதிவு !

27 September 2020, 12:30 pm
Quick Share

மார்கெட் இல்லாத லட்சுமி மேனன் உடம்பை குறைத்து மீண்டும் புத்தம் புது பொலிவாக சினிமாவில் இறங்க உள்ளார். கேரளா தேசத்தை பூர்விகமாக கொண்ட லக்ஷ்மி மேனன், மலையாள படத்தில் துணை நடிகையாக நடிப்பில் அசத்திய அவரை வாரி அணைத்தது தமிழ் சினிமா. சில படங்களில் நடித்த பிறகு முன்னணி நடிகர் ஜோடி போட்ட அவர் முதல் படத்திலேயே விருது வாங்கும் அளவுக்கு சென்றார். பாவடை தாவணி என கிராமத்து பெண்ணாக தனது பயணத்தை தொடங்கினார்.

முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர். நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார். கேட்டதற்கு அம்மணி வெயிட் போட்டுவிட்டார் அதனால் தான், இளம் வயதிலேயே ஆன்ட்டி போன்று இருக்கும் அவரை கமிட் செய்ய சினிமாக்காரர்கள் யோசிக்கிறார்கள் என்று பேச்சு எழுந்தது. அதோடு அம்மணி படிப்பில் பிஸியாக இருக்கிறார். படிப்பு டிஸ்டர்ப் ஆகாமல் இருக்கதான் நடிப்புக்கு லீவு விட்டிருக்கிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் பிக் பாஸ் சீசன் 4 – இல் கலந்துகொள்ள போவதாகவும், அதற்காக தன்னை தனிமை படுத்தி கொண்டதாகவும் தகவல்கள் வந்தது. இது குறித்து லக்ஷ்மி மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “என்னால் அடுத்தவர்களுக்கு தட்டுகளையும் கால்களையும் கழுவ முடியாது, கேமரா முன் நின்று சண்டை போட முடியாது, பிக்பாஸ் ஒரு ஷிட், நான் அதில் பங்கு கொள்ளவில்லை” என்று திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Views: - 9

0

0