நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் டும் டும் டும்..! மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஆடி போயிடுவீங்க..! ஷாக்கில் ரசிகர்கள்..!

Author: Vignesh
3 December 2022, 7:00 pm
lakshmimenon - updatenews360
Quick Share

கடந்த 2012 ஆம் ஆண்டு சுந்தரபாண்டியன் என்ற தமிழ் திரைப்படத்தில் அறிமுகமான நடிகை லட்சுமி மேனன் அதன் பிறகு தமிழ் சினிமாவில் பலராலும் அறியப்பட்ட நடிகையாக மாறினார்.

இவர் நடித்த இரண்டாவது திரைப்படமான கும்கி இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கியது. அதன்பிறகு குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மஞ்சப்பை, மிருதன் உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக மற்றும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

lakshmimenon - updatenews360

இவர் நடிக்கக்கூடிய அனைத்து படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வந்தன. இதனால் ராசியான நடிகை என்ற பெயருடன் தமிழ் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்து வந்த நடிகை லட்சுமி மேனனுக்கு ஒரு கட்டத்தில் திடீரென பட வாய்ப்புகள் சரியத் தொடங்கியது.

புகழ் போதையில் இருந்த நடிகை லட்சுமிமேனன் தன்னுடைய கதை தேர்வில் கோட்டை விட்டு விட்டார் என்றுதான் கூறவேண்டும். தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்த லட்சுமிமேனன் ஒரு கட்டத்தில் தொடர்ந்து தோல்விப் படங்களாக அமைந்தது.

lakshmimenon - updatenews360

இது அவருடைய சினிமா வாழ்க்கைக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக அமைந்து விட்டது. ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்ற சூழ்நிலை வரும்போது நான் படிப்பை விட்டு சொல்கிறேன் என்று பாதியில் நிறுத்திய தம்முடைய படிப்பைத் தொடர்வதற்காக தன்னுடைய சொந்த ஊரான கேரளாவுக்கு சென்றார்.

அங்கே படிப்பை முடித்த அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் சொல்லிக்கொள்ளும்படி கிடைக்கிறதா..? என்றால் இல்லை என்று தான் கூற வேண்டும். இங்கே நடிகர் விஷால் நடிகை லட்சுமி மேனனை காதலித்து வந்தார் எனவும் அந்த காதலை ஏற்றுக் கொள்ளாததால் தான் லட்சுமிமேனனுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை எனவும் கூட கோடம்பாக்கத்தில் அரசல்புரசலாக பேச்சுக்கள் எழுந்து வருகின்றது.

lakshmimenon - updatenews360

இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. மறுபக்கம் நடிகை லட்சுமி மேனனுக்கும் பிரபல நடிகர் சிம்புவுக்கும் திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

40 வயதைத் தாண்டிவிட்ட நடிகை சிம்பு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். இதனாலேயே இவர் இவரைத்தான் திருமணம் செய்யப்போகிறார்… இந்த நடிகையை தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்.. என்று அடிக்கடி தகவல்கள் வெளியாகி வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.

நடிகர் சிம்புவை காதலித்து வந்த நடிகையான நயன்தாரா மற்றும் ஹன்சிகா ஆகிய இருவரும் திருமண பந்தத்தில் இணைந்து விட்ட நிலையில் நடிகர் சிம்பு மட்டும் இன்றும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.

Simbu - updatenews360

இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் சிம்புவை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து லட்சுமி மேனன் தரப்பில் இருந்து நடிகர் சிலம்பரசன் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Simbu - updatenews360

இதனை அறிந்த ரசிகர்கள் வழக்கம் போல இதெல்லாம் கட்டுக்கதை என்று கூறுகிறார்கள். ஆனால், மறுபக்கம் நெருப்பில்லாமல் புகையுமா..? என்று என்றும், பொறுத்திருந்து பார்ப்போம் என்றும் கூறும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். நடிகர் சிலம்பரசன் நடிகை லட்சுமிமேனனை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் இது தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் தான் ஆழ்த்தியுள்ளது.

Views: - 1695

70

38