“ஆமா நிச்சயதார்த்தம் முடிந்தது…” விஷாலோட திருமணம் குறித்து உண்மையை உடைத்த லட்சுமி மேனன்!

6 September 2020, 11:00 am
Quick Share

முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடி போட்ட லக்ஷ்மி மேனனுக்கு வரிசையாக அனைத்து படங்களும் ஹிட்டடித்தன. தொடர் தோல்விகளை கண்ட மாஸ் நடிகர்கள் கூட அவருடன் ஜோடி போட்டு மார்க்கெட்டை தக்க வைத்தனர். நன்றாக சென்றுக்கொண்டிருந்த அவரது கிராப் லேசாக சரிய தொடங்கியது. பின்னர் சில காலமாய் தமிழ் சினிமாவில் ஆளே காணாமல் போய்விட்டார்.

இந்தநிலையில், இவருடன் கிசுகிசுக்கப்பட்ட விஷாலுக்கு பிரபல தொழிலதிபரின் மகள் அனிஷா என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகியது. ஆனாலும் திருமணம் குறித்து எந்த தகவலும் வெளியாகிவில்லை.

இந்த நேரத்தில், பேட்டி அளித்த லட்சுமி மேனன், “தமிழ் சினிமாவில் இன்னும் யாருடன் Touch-இல் இருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டதற்கு, “எப்போதாவது விஷால்கிட்ட பேசுவேன். அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிஞ்சிருக்கு. கல்யாணத்துக்குச் கூப்பிட்டார்னா அப்போ இருக்குற சூழலைப் பொறுத்து போவேன் என்று கூறியுள்ளார்.

Views: - 15

0

0