அட்ஜெஸ்ட்மென்ட் டார்ச்சர் விஷயத்தில்… நடிகர் விஜய்… ஓப்பனாக கூறிய லட்சுமி ராமகிருஷ்ணன்!

Author:
30 August 2024, 11:53 am

பிரபலமான தென்னிந்திய சினிமா நடிகையான பாவனா கடந்த 2017 ஆம் ஆண்டு சூட்டிங் முடித்துவிட்டு இரவு நேரத்தில் காரில் வீடு திரும்பி கொண்டு இருந்தபோது மர்ம நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த பிரச்சனையை மிகப்பெரிய பூதாகரமாக வெடித்ததை தொடர்ந்து இந்த சம்பவத்தில் யார் யார் ஈடுபட்டு இருக்கிறார்கள் என துரித விசாரணை மேற்கொண்டத்தில் பிரபல நடிகர் திலிப் இதன் பின்னணியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பேரதிர்ச்சியை கொடுத்தது .

அதை எடுத்து திரைப்பட நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப பெண் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்று கூடி கேரளா கேரளா அரசிடம் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க ஒரு தனி விசாரணை குழு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதன் பேரில் வழக்கறிஞர் ஹேமா தலைமையில் குழுவை அமைத்துக் கொடுத்தது கேரளா அரசு .

அதில் நடிகைகள் தங்களுக்கு நேத்த பாலியல் புகார்களை தொடர்ச்சியாக கொடுத்து வந்த நிலையில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஹேமா அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இதில் பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த கசப்பான அனுபவங்களை வெளிப்படையாக கூறி வரும் நிலையில் பிரபலமான நடிகர் இயக்குனர்கள் இதில் சிக்கியிருக்கிறார்கள் .

actor vijay

இந்த விஷயம் பெரும் பூதாகரமாக வெடித்ததை அடுத்து இது குறித்து பல பிரபலங்கள் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சமூக ஆர்வலரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன்…தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்கள் என எடுத்துக்கொண்டால் விஜய், அஜித், சூர்யா, அருள்நிதி, கார்த்தி சிவகார்த்திகேயன் போன்ற இளம் தலைமுறை நடிகர்களால் பாலியல் சுரண்டல்கள் இதுவரை நடைபெறவில்லை என தைரியமாக தன்னுடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!