உடல் எடை எல்லாம் குறைத்து ஸ்லிம்மாக மாறிய லட்சுமி ராமகிருஷ்ணன்..! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள்..!

Author: Aarthi Sivakumar
30 June 2021, 8:32 am
Quick Share

கொரோனா கால கட்டத்தில் பலரும் தங்களுக்கு என புதுப்புது விஷயங்களை முயற்சி செய்து வருகின்றனர். இதில் நடிகர் நடிகைகளுக்கு சூட்டிங் நடக்காததால் அவர்களும் வீட்டில் இருந்தபடி பல்வேறு விஷயங்களை செய்து வீடியோவாக வெளியிட்டு வருகின்றனர் தற்போது லட்சுமி ராமகிருஷ்ணனும் உடல் உழைப்பில் ஈடுபட்டு தற்போது ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

அம்மா கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் நடிகை மட்டுமில்லாமல் இயக்குனர் ஆவார். இவர் யுத்தம் செய், நான் மகான் அல்ல, பிரிவோம் சந்திப்போம், ஈரம், நாடோடிகள், விண்ணைத்தாண்டி வருவாயா, ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் இயக்கிய ஆரோகணம் படம் மக்களிடையே பாராட்டைப் பெற்றது. சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி பலரது பஞ்சாயத்தை தீர்த்து வைக்க முயன்று ட்ரோல் மெட்டீரியல் ஆனார்.

ஆனால் அதைத் தாண்டி தற்போது தனது உடல் எடையை குறைக்க முயற்சி செய்து வந்தவர் இன்ஸ்டாவில் உடல் குறைப்பிற்கு பின் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். “என்னது, லட்சுமி ராமகிருஷ்ணனா இது” என ரசிகர்கள் அடடே போடுகிறார்கள்.

Views: - 645

5

2