தாமதமாக மாநாடு திரைப்படத்திற்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரபல இயக்குனர்… நன்றி தெரிவித்த சிம்பு…

Author: Mari
28 December 2021, 7:30 pm
Quick Share

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து, வெளியான மாநாடு திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் திரையரங்கிற்கு வரவழைத்துள்ளது.


சிம்பு, தனது மாஸான பஞ்ச டையலாக் பேசி நடித்த, பாதையை மாற்றி வேறுபட்ட கோணத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். அவருக்கு இணையான தனது மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா படத்திற்கு மேலும் வலுசேர்த்துள்ளார்.


மிகவும் சிக்கலான கதையைத் தேர்தெடுத்து, அதனை புரியும் வகையில் படமாக்கிய இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு திரையுலகினர் பலரும் பாராட்டுத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், இயக்குனர் செல்வராகவன் மாநாடு படக்குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.


டிவிட்டரில், ‘தாமதமாய் மாநாடு படம் பார்த்ததற்கு மன்னிக்கவும். படத்தை ரசித்து பார்த்தேன்.!! சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா அருமை. மற்றும் படக்குழுவினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள அவர், இது விடாமுயற்சிக்கும், அயராத உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி! என தெரிவித்துள்ளார். இதற்கு நடிகர் சிம்பு நன்றி தெரிவித்துள்ளார்.

Views: - 344

0

0