லீக்கான வீடியோ… லட்சுமி மேனன் சினிமா வாழ்க்கையே க்ளோஸ்? பரபரக்கும் சினிமாத்துறை!!
Author: Udayachandran RadhaKrishnan28 August 2025, 10:41 am
சினிமா உலகத்தையே நேற்று பரபரப்பு ஆக்கியிருக்கிறார் நடிகை லட்சுமி மேனன். மார்க்கெட் இல்லாமல் முடங்கி கிடக்கும் லட்சுமி மேனனுக்கு பெரிய இடியாக அமைந்துள்ளது நேற்றைய சம்பவம்.
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த லட்சுமிமேனன் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார். சமீபத்தில், ஆண் நண்பர்களுடன் பாருக்கு சென்ற லட்சுமிமேனன், அங்கு ஏற்பட்ட மோதலால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
பாரில், ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் சிலர் லட்சுமிமேனனை கேலி செய்ததாகவும், இதனால் வாக்குவாதம் முற்றி சண்டையாக மாறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சண்டை தீவிரமடைந்ததால், ஐ.டி. ஊழியர்கள் அங்கிருந்து காரில் தப்பிக்க முயன்றனர். ஆனால், லட்சுமிமேனனின் நண்பர்கள் அவர்களை துரத்தி, காரை வழிமறித்து, பாட்டிலால் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், லட்சுமிமேனன் தற்போது தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உச்சத்தில் இருந்து பின்னடைவு வரை சிறு வயதிலேயே சினிமாவில் அறிமுகமாகி, தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து, முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் லட்சுமிமேனன்.
News as Police searching for actress Lakshmi Menon in connection with the abduction of an IT employee. She is accused of obstructing the IT employee's vehicle.
— Sathishkumar chandrasekaran (@SatSathishkumar) August 27, 2025
The incident stems from a two-sided conflict that occurred at a private liquor bar in Kochi. Three individuals have… pic.twitter.com/WbU4VelXfu
ஆனால், சில ஆண்டுகளுக்கு முன் அவரது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் மனமுடைந்த லட்சுமிமேனன், சினிமாவில் இருந்து ஒதுங்கினார். பின்னர், ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்தபோதிலும், மன அழுத்தம் காரணமாக படப்பிடிப்பில் ஒத்துழைப்பு அளிக்காததால், அந்த வாய்ப்புகளும் பறிபோனதாக கூறப்படுகிறது.
தற்போது, பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், லட்சுமிமேனன் குடி மற்றும் ஆட்டத்தில் தனது வாழ்க்கையை தொலைத்துவிட்டதாக பிரபல செய்யாறு பாலு ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்கள் லட்சுமிமேனனின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.
