தனுஷ்43 படத்தின் புகைப்படத்தை வெளியிட்ட மாளவிகா மோகனன் – மாஸ் லுக்கில் கெத்து காட்டும் தனுஷ்

7 February 2021, 10:41 pm
Quick Share

தனது அண்ணன் இயக்கத்தில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகமானவர் தனுஷ். ஆரம்ப காலத்தில் பென்சில்ல கோடு போட்ட மாதிரி இருக்காரே என கலாய்க்காத ஆட்கள் இல்லை என சொல்லும் அளவு பயங்கர கேலிக்கு உள்ளானார்.

ஆனால் தனது கடின உழைப்பால் தற்போது தமிழ் சினிமாவில் யாரும் கண்டிராத ஒரு வளர்ச்சியை அடைந்து இருக்கிறார் தனுஷ். மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் போன்ற படங்களை முடித்துக் கொடுத்த தனுஷ், கைவசம் ஆயிரத்தில் ஒருவன் 2, புதுப்பேட்டை 2, பாலிவுட்டில் ஒரு படம், ஹாலிவுட்டில் ஒரு படம் என கிட்டத்தட்ட 10 படங்கள் வைத்திருக்கிறார்.

தற்போது துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவருக்கு ஜோடியாக பேட்ட, மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

தனுஷின் 43 வது படமான இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. புதிய லுக்கில் தெறி மாஸாக இருக்கிறார் தனுஷ் . எப்போதும் ரசிகர்களை ஏமாற்றாமல் தனது புகைப்படங்களை பதிவேற்றும் மாளவிகா மோகனன், தற்போது தனுஷுடன் இருப்பதுபோல் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் “முதல் முதல்கட்ட படப்பிடிப்பில் உங்களுடன் இணைந்தது மகிழ்ச்சி. இரண்டாவது கட்ட படப்பிடிப்புக்காக காத்திருக்கிறேன்c என கேப்ஷன் போட்டுள்ளார். இதனால் மாளவிகா மோகனன் ரசிகர்கள் மட்டுமில்லாமல் தனுஷ் ரசிகர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

Views: - 0

0

0