Legend சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியா இது ? தெறிக்கும் Fight Scene – Viral ஆன Photos !

1 March 2021, 1:38 pm
Quick Share

Legend சரவணன் நடித்த விளம்பர படங்களை இயக்கிய, இரட்டை இயக்குனர் களான ஜேடி-ஜெர்ரி தற்போது லெஜன்ட் சரவணன் நடிக்கும் படத்தை இயக்குகின்றனர். இவர்கள் முன்பு விக்ரம், அஜீத் நடித்த உல்லாசம், விக்ரமாதித்யா, ஷெரின் நடித்த விசில் ஆகிய படங்களை இயக்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தில் சரவணனுக்கு கதாநாயகியாக யார் தெரியுமா..? ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற வட இந்திய மாடல் ஈத்திகா திவாரி. மேலும், முக்கிய வேடங்களில் பிரபு மற்றும் விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

ஒளிப்பதிவை வேல் ராஜ் கவனித்துக் கொள்கிறார். பேண்டஸி ஜானரில் எடுக்கபப்டும் இந்தப் படத்தை, ஹீரோவாக நடிக்கும் சரவணனே தயாரிக்கிறார். பூஜை போட்ட பின் இந்த படத்தை பற்றிய அப்டேட் இல்லாமல் இருந்தது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களுக்கு பின் ஜரூராக தொடங்கியுள்ளது. அட்டகாசமான சண்டைக் காட்சியுடன் ஆரம்பித்த இந்த படப்பிடிப்பு புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் “Legend சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சியா இது ?” என்று வாயை பிளந்து பார்க்கின்றனர்.

Views: - 2965

9

6