நம்மள ஏமாத்திட்டாங்க சித்தப்பா- லியோவின் உண்மையான வசூல் இவ்வளவு கம்மியா? வெளிவந்த குட்டு
Author: Prasad22 August 2025, 4:28 pm
விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படம்
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம்தான் “லியோ”. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் அர்ஜுன், சஞ்சய் தத், மடோன்னா செபஸ்டியன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரூ.600 கோடி வசூல் செய்ததாக இத்திரைப்படத்தை தயாரித்த லலித் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இதன் உண்மைத்தன்மை குறித்து வெளிவந்துள்ளது.

வருமான வரி தாக்கலால் வெளியான குட்டு
இந்த நிலையில் தயாரிப்பாளர் லலித்குமார் வரிமான வரி தாக்கல் செய்துள்ளார். இதில் அவர் “லியோ” திரைப்படத்தின் மொத்த திரையரங்கு வசூலே ரூ.160 கோடியே 50 லட்சம்தான் என குறிப்பிட்டுள்ளார். அது போக “லியோ” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.124 கோடிக்கும் ஆடியோ உரிமம் ரூ.24 கோடிக்கும் ஹிந்தி உரிமம் ரூ.24 கோடிக்கும் தென்னிந்திய சேட்டலைட் உரிமம் ரூ.72 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. மொத்தத்தில் “லியோ” திரைப்படம் ரூ.404.56 கோடியே வசூலாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

லலித்குமார் செய்த வருமான வரித்தாக்கலின் விவரம் இணையத்தில் கசிந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் பலரும் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இப்படி ஏமாற்றப்பட்டுவிட்டோமே என புலம்பி வருகின்றனர். “கூலி” திரைப்படம் “லியோ” படத்தின் வசூலை முறியடிக்க வாய்ப்பில்லை என விஜய் ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது “லியோ” படம் மொத்தமாகவே ரூ.400 கோடி வசூல் செய்திருக்கும் தகவல் வெளிவந்து அவர்களை தூங்க விடாமல் செய்துள்ளது.
