படம் பரபரப்பா இருக்கும்… வெறித்தனமான அப்டேட்டுடன் வெளிவந்த “லியோ” Run Time!

Author: Shree
22 September 2023, 12:25 pm

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. எனவே படத்தின் ரிலீஸ் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விஜய் ரசிகர்களும் படத்தை கொண்டாட மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் லியோ படத்தின் ஒரு மாஸான அப்டேட் வெளியாகியுள்ளது.

அதாவது இப்படத்தின் ரன்னிங் டைம் விவரம் குறித்த ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. லியோ திரைப்படம் “2 மணிநேரம் 39 நிமிடங்கள்” என கூறப்படுகிறது. எனவே படத்தின் கதை வழக்கம் போன்றே லோகேஷ் கனகராஜின் ஸ்டைலில் மிகவும் ஸ்வாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் இருக்கும் என நிச்சயம் நம்பலாம்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?