விட்ட இடத்துல மீண்டும்… ‘லியோ’ வெற்றி விழாவில் பங்கேற்கும் விஜய் : லலித் போட்ட ‘மாஸ்டர்’ பிளான்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 October 2023, 6:06 pm
Vijay - Updatenews360
Quick Share

விட்ட இடத்துல மீண்டும்… ‘லியோ’ வெற்றி விழாவில் பங்கேற்கும் விஜய் : லலித் போட்ட ‘மாஸ்டர்’ பிளான்!!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த நிலையில் இந்த படம் குறித்த அப்டேட் வரும்போதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினை நடந்து கொண்டே இருந்தது.

அதாவது படத்தின் இசை வெளியீட்டு விழா நடத்துவதாக இருந்தது. ஆனால் அது திடீரென ரத்தாகிவிட்டது. இந்த சம்பவத்திற்கு பின்னால் அரசியல் இருப்பதாக பேசப்பட்டது. ஆனால் வேறு ஒரு வழக்கில் காவல் துறை கூறிய போது லியோ இசை வெளியீட்டு விழாவை படதயாரிப்பு நிறுவனம்தான் ரத்து செய்தது என விளக்கமளித்தனர்.

இதைத் தொடர்ந்து அனைவரும் எதிர்பார்த்த டிரெய்லர் அண்மையில் வெளியானது. அதில் விஜய் கெட்ட வார்த்தை பேசியிருந்ததால் பலரது கண்டனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் படம் வெளியான போது பலருக்கு டிக்கெட் கிடைப்பதில் குளறுபடி இருப்பதாக சொல்லப்பட்டது. அதன் பிறகு அது சரியாகிவிட்டது. இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து இரு மாதிரியான விமர்சனங்கள் வருகின்றன.

குறிப்பாக இந்த படத்தை வைத்து ரஜினி ரசிகர்கள் விவாதமே நடத்தி வருகிறார்கள். மேலும் லியோ திரையிடப்பட்ட சிலநாட்களிலேயே ரூ 1000 கோடி வசூல் என ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கொண்டாடினர். பல்வேறு திரையரங்குகளில் புக் ஆகாமல் இருந்து வரும் நிலையில் எப்படி ரூ 1000 கோடி வசூலாகும் என ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் லலித்குமார் படத்தின் வசூல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதன்படி லியோ திரைப்படம் வெளியாகி 7 நாட்களில் ரூ 461 கோடி வசூலை குவித்துள்ளது என அறிவிக்கப்பட்டது. இதை ரஜினி ரசிகர்கள் டிரென்ட்டாகினர். லியோ படத்தை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

இந்த நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. லியோ படத்தின் வெற்றி விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வதால் பாதுகாப்பு கோரி படத் தயாரிப்பாளர் லலித்குமார் பெரியமேடு காவல் நிலையத்தில் கடிதம் அனுப்பியுள்ளார்.

அதே இசை வெளியீட்டு விழா நடைபெற இருந்த நேரு உள் விளையாட்டரங்கில் வெற்றி விழா நடத்த லலித் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 424

2

0