விஜய் ரசிகர்ளுக்கு ஓர் ஹேப்பி நியூஸ்… ஒரு நாள் முன்னதாகவே ரிலீஸாகும் லியோ!

Author: Shree
5 October 2023, 4:10 pm

தமிழ் சினிமாவின் முன்னணி டாப் ஹீரோ என்ற அந்தஸ்தில் இருக்கும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் திரிஷா. கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். காரணம் லோகேஷ் இயக்கத்தில் வெளிவரும் வரும் வித்தியாசமான, மரண மாஸாக கொண்டாடப்படும் படமாக இருக்கும் என்பதால் தான். அண்மையில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி படத்தின் மீதான கவனத்தை அதிகரித்தது. மேலும், லியோ படத்திற்கு சென்சார் யூ/ ஏ சான்றுகள் வழங்கி உள்ளது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இன்று படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. இதறகக ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் கிடைத்துள்ளது.

அதாவது, லியோ படம் ஒரு நாளுக்கு முன்னதாகவே அக்டோபர் 18ம் தேதி இப்படத்தின் பிரீமியர் காட்சி ரிலீஸ் ஆகும் என தற்போது தகவல் கிடைத்துள்ளது. லியோ படத்தின் ஆடியோ லான்ச் ரத்து, ட்ரைலர் பொதுவெளியில் ரிலீஸ் செய்வதற்கு தடை என அடுத்தடுத்த பிரச்சனையில் சிக்கி வந்ததால் விஜய் ரசிகர்கள் வேதனையில் இருந்தனர். இந்நிலையில் இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.

  • kamal haasan not invited for waves 2025 கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!