கவின் படத்தில் இணைந்த குக் வித் கோமாளி பவித்ரா லட்சுமி!
5 February 2021, 12:30 pm
கவின் நடிப்பில் உருவாகி வரும் லிப்ட் படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி இணைந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் பிரபலமானவர் கவின். இது மட்டுமல்லாமல் பீட்சா, இன்று நேற்று நாளை, சத்ரியன், நட்புனா என்னானு தெரியுமா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவ்வளவு ஏன், கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3ஆவது சீசனில் கவின் கலந்து கொண்டார்.
அதில், முதலில் அபிராமி, லோஸ்லியா, சாக்ஷி அகர்வால் ஆகியோரை காதலித்தார். முதலில் முக்கோண காதலாக இருந்தது. அதன் பிறகு கவின் மற்றும் லோஸ்லியா இருவரும் ஒருவரையொருவர் நன்கு புரிந்து கொண்டு காதலர்களாக இருந்தனர். லோஸ்லியா இறுதிப் போட்டி வரை சென்று டைட்டில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ரூ.5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு கவின் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் அன்பைப் பெற்றார்.
இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து லிப்ட் படத்தில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். இதில், பிகில் பட நடிகை அம்ரிதா ஐயர் ஹீரோயினாக நடிக்கிறார். வினீத் வரபிரசாத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியானது. இந்த நிலையில், இந்தப் படத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பவித்ரா லட்சுமி இணைந்துள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
0
0